அமெரிக்க வான் தாக்குதலில் ஐ.எஸ் மூத்த தலைவர் பலி

சிரியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஐரோப்பாவில் தாக்குதல்களுக்கு திட்டமிட்டதில் பின்னணியில் இருந்ததாக நம்பப்படும் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் மூத்த தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

காலித் அயித் அஹமது அல் ஜபூரி என்ற அந்தத் தலைவர் விபரம் வெளியிடப்படாத இடம் ஒன்றில் கொல்லப்பட்டதாக அமெரிக்க கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதில் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் சிரியா தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

எனினும் ஜிஹாதிக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் இத்லிப் பிராந்தியத்தில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்றிலேயே ஜபூரி கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஐ.எஸ் தலைமை கட்டமைப்பை ஐ.எஸ் உருவாக்கியதாக குறிப்பிட்டிருக்கும் அமெரிக்கா, அவரது மரணம் அந்தக் குழு வெளிநாடுகளில் நடத்தும் தாக்குதல் சதிகளை முறியடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

எனினும் மத்திய கிழக்கில் மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் ஐ.எஸ் தொடர்ந்தும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

சிரியாவில் சுமார் 900 அமெரிக்கத் துருப்புகள் தொடர்ந்து நிலைகொண்டிருப்பதோடு எஞ்சியுள்ள ஐ.எஸ் குழுவுடன் அது போராடி வருகிறது.

Related Articles

Latest Articles