இதுவரை கட்டப்பட்ட மிக சக்திவாய்ந்த ரொக்கெட் தனது முதல் பயணத்திற்காக விண்வெளிக்கு ஏவப்படவுள்ளது.
ஸ்டார்ஷிப் என்ற இந்த ரொக்கெட் அமெரிக்காவின் பெரும் செல்வந்தர் இலொன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது. 120 மீற்றர் (400 அடி) உயரம் கொண்ட இந்த ரொக்கெட் வரலாற்றில் இதுவரை உருவாக்கப்பட்ட ரொக்கெட்டுகளை விடவும் இரு மடங்கு பெரிதாகும்.
சோதனை முயற்சியாக இந்த ரொக்கெட் இலங்கை நேரப்படி இன்று (18) டெக்சாஸில் உள்ள போகா சிகாவில் இருந்து ஆளின்றி பயணிக்கவுள்ளது. வானின் மேல் மட்டத்தில் கிழக்கு நோக்கி அனுப்பப்படும் இந்த ரொக்கெட் கிட்டத்தட்ட உலகை ஒரு முறை சுற்றவுள்ளது.
ஸ்டார்ஷிப் சோதனை ஒன்றரை மணி நேரம் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.










