நுவரெலியாவில் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய சந்தேக நபர்கள் கைது

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை சமரசம் செய்ய தலையிட்ட பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா வசந்த கால திடலில் கடந்த (22) இரவு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாகொல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய ஒருவர் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர் . ஏனைய நான்கு சந்தேகநபர்கள் 23 ஆம் திகதி மாலை கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related Articles

Latest Articles