” மக்கள் பிரச்சினைகளை அறிந்து அவற்றுக்கு தீர்வை வழங்ககூடிய எந்தவொரு நபருக்கும் நாம் ஆதரவு வழங்குவோம்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
கண்டிக்கு இன்று பயணம் மேற்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ச, தலதாமாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.










