சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 5 சொகுசு வாகனங்கள் கைப்பற்றப்பட்டன!

காரின் உதிரி பாகங்கள் எனக் கூறி ஜப்பானில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட நான்கு மிட்சுபிஷி ஜீப் வண்டிகளும் சுபாரு ரக கார் ஒன்றும் இலங்கை சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக இலங்கை சுங்க திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த 5 வாகனங்கள் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புடையது எனவும் இதன் இறுதி மதிப்பீட்டை பெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த 5 கார்களும் இலங்கை சுங்கத்துக்கு வாகன உதிரிப்பாகங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு இறக்குமதி செய்யப்படவை என்றும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles