பதுளை, ஹாலிஎல பகுதியில் வேனொன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 8 யுவதிகள் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பதுளையில் இருந்து நேற்றிரவு விகாரையொன்றுக்கு சென்ற நடன குழுவினர், இன்று அதிகாலை மீண்டும் பதுளை பகுதிக்கு திரும்பும்வேளை, பதுளை – பண்டாரவளை வீதியில் ஹாலிஎல பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பாரிய மரம் ஒன்றில் மோதி வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்த 8 யுவதிகள், 3 இளைஞர்களுமாக 11 பேர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் 20 வயதுக்கு குறைந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் 7 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
