சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க ஐக்கிய மக்கள் சக்தி இன்று ஏகமனதாக முடிவு!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு இன்று அனுமதி வழங்கியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவால் மேற்படி யோசனை முன்வைக்கப்பட்டு, அது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.

Related Articles

Latest Articles