கம்பளை தொழுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு மனித பாவனைக்காக வழங்கப்படும் குடி நீரில் மலக்கழிவுகள் (E colai bacteria) கலந்திருப்பதாக சுகாதார பிரிவினர் தெவிக்கின்றனர் 

மேற்படி குடி நீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வைகாணும் நோக்கில் இன்று (25) தொலுவ ஸ்ரீ பிம்பாராமய விகாரையில் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரட்ண மற்றும் பிரதேச செயலாளார் யமுனா தயாரட்ண ஆகியோரின் தலைமையில் கம்பளை உடபளாத்த பிரதேச செயலாளர் மற்றும் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் உட்பட அரச அதிகாரிகள் குழுவினருடனான கலந்துரையாடல் ஒன்று இடம் பெற ஏற்பாடாகியுள்ளது 

மேலும் ஈ கோளய் பக்டீரியா தொற்றுகிருமிகள் கலந்துள்ள நீரை அருந்தியமைனாலேயே தொலுவ குருகெலே பிரதேசத்தைச்சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் உயிரிழந்தமை சுகாதார தரப்பினரால் உறுதி படுத்தப்பட்டுள்ளது
தொலுவ பிரதேசத்திக்குட்பட்ட பல்லேதெல்தொட்ட, வாரியகல,புபுரஸ்ஸ,லெகுந்தெனிய,கொங்கா ஓயா ஆகிய பிரதேசங்களிலிருந்து ஓடைகள் நீரூற்றுக்கள் உட்பட 31 நீர் நிலைகளிலிருந்து பெறப்படும் மேற்படி நீரினை தொலுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 15,000 குடும்பங்களும் உடபளாத்த பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒரு பகுதியினரும் குடி நீராக பயன்படுத்தி வருகின்றனர்
மேற்குறிப்பிட்ட நீர் நிலைகளை பரீட்சித்துபார்த்ததில் மனித குடியிருப்புக்களிலிருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் மலசல கழிவுகளை வடிகான் களில் வெளியேற்றுதல் குரங்கு பன்றிகளின் எச்சங்கள் என்பன கலந்துள்ளமை தெரியந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது கம்பளை நிருபர்
