எதிர்வரும் ஜூலை மாதம் மின் கட்டணம் 23 சதவீதத்தால் குறைக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
” எரிபொருள்,நிலக்கரி ஆகியவற்றின் விலை குறையுமாயின் அதன் பயனை மக்களுக்கு வழங்குவோம் என்று குறிப்பிட்டுள்ளோம். எனினும், மின்கட்டணத்தை 3 சதவீதத்தால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது.
0-30 வரையான மின்னலகுக்கான கட்டணத்தை எதிர்வரும் ஜூலை லை மாதம் குறைந்தபட்சம் 23 சதவீதத்தாலும்,31-60 வரையான மின்னலகுக்கான கட்டணத்தை 09 சதவீதத்தாலும் குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மின்பாவனையாளர்களுக்கு நிச்சயம் நிவாரணம் வழங்குவோம்.” எனவும் அவர் கூறினார்.
