உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் அமைச்சரவைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
இதன்போதே நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும், வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியும் இணைந்து இதற்கான அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பான அமைச்சரவை யோசனை வருமாறு,
தென்னாபிரிக்காவின் சர்வதேச தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சரின் அழைப்பின் பேரில் அந்நாட்டின் உண்மை மற்றும் ஒருமைப்பாட்டு ஆணைக்குழு தொடர்பான ஆரம்பக் கற்கைகளை மேற்கொள்வதற்காக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ஆகியோர் அந்நாட்டுக்கு விஜயம் செய்திருந்தனர்.
குறித்த விஜயத்தின்போது தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி மற்றும் சர்வதேச தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் உள்ளிட்ட அந்நாட்டு அரச பிரதானிகளுடன் கலந்துரையாடல் நடாத்தப்பட்டது.
அதற்கமைய, தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் ஒருமைப்பாட்டு ஆணைக்குழுவின் செயற்பாடுகளைக் கருத்தில் கொண்டு, எமது நாட்டில் உண்மை மற்றும் ஒருமைப்பாட்டு பொறிமுறையை தாபிப்பதற்காக இரு அமைச்சர்களும் இணைந்து தாக்கல் செய்த பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.










