கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட ஹெல்பொட, காச்சாமலை தோட்டத்தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (20) ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்தது.
பல தசாப்தங்களாக இயங்கிய தொழிற்சாலையை மூடுவதற்கு நிர்வாகம் எடுத்த முடிவைக்கண்டித்தும், தொழிற்சாலையை மீள திறக்குமாறு வலியுறுத்தியுமே தொழிலாளர்கள் போராடிவருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தோட்ட காரியாலயத்துக்கு முன்பு இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இவ்விகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாரும் பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன், இதற்கான தீர்வு நாளை 21/10/2020 புதன்கிழமை எட்டப்படும் என்று குறிப்பிட்டார்.
தகவல் : நீலமேகம் பிரசாந்த்