செயற்கை சிறுநீரகங்கள், இரத்த நாளங்களுக்கு பற்றாக்குறை

சிறுநீரக நோயாளர்களுக்கு டயாலிசிஸ் செய்ய பயன்படுத்தப்படும் செயற்கை சிறுநீரகங்கள் மற்றும் இரத்த நாளங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனால் சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல்கள் ஏற்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், சிறுநீரகம் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான தேசிய மையத்தில் (சிறுநீரக மருத்துவமனை) நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் செயற்கை சிறுநீரகங்கள் மற்றும் இரத்த நாளங்கள் இன்னும் ஒரு வாரத்திற்கு மட்டுமே போதுமானது என்று கூறப்படுகிறது.

Related Articles

Latest Articles