தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பாரியாரான ஜலனி பிரேமதாச தெரிவித்துள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜலனி பிரேமதாச தொடர்பில் அண்மைக்காலமாக சமூகவலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் அரசியலுக்கு வரப்போகின்றார் எனவும் கூறப்படுகின்றது. அதுமட்டுமல்ல ஐக்கிய மக்கள் சக்தியை அவரே கட்டுப்படுத்துகின்றார் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர், ஜலனி பிரேமதாசவுடன் பேச்சு நடத்தியுள்ளனர். இதன்போதே அவர் இவ்வாறு கூறினார் என தகவல் வெளியாகியுள்ளது.
