நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ எடைகொண்ட லிற்றோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்படவுள்ளது என்று லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார்.
இதன்படி, 300 ரூபாவுக்கும் அதிக தொகையில், விலை குறைப்பு இடம்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.
விலை குறைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் நாளை விடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, லாப் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படுமா என்பது பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
