அரச பங்காளியாக முற்போக்கு கூட்டணி சாதித்தவை எவை? பட்டியலை வெளியிட்டார் மனோ!

2015 இல் ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி, முதன் முறையாக ஆட்சியில் பங்காளிகளாக செயற்பட்ட நான்கே (2015-2019) வருடங்களில் ஏற்படுத்திய சாதனைகளும், அடித்தளங்களும், எமது தொடர்சியான அரசியல் பயணமும்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு,

01. நுவரெலிய மாவட்டத்தில், மேலதிக புதிய ஆறு பிரதேச சபைகள் அமைக்கும் தீர்மானம், அரசாங்கத்துக்குள் நடைபெற்ற பெரும் வாத விவாதங்களுக்கு பின்னர், ஏற்றுக்கொள்ளப்பட்டு, புதிய பிரதேச சபைகள் அமைக்கப்பட்டு, மலையக தமிழ் மக்களுக்கான தேசிய அரசியல் அதிகாரம் பகிர்வு பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

02. தேசிய அரசியல் அதிகாரம் பகிர்வுக்கு சமானமாக, தேசிய நிர்வாக அதிகார பரவலாக்கல் கொள்கையின்படி, புதிய பிரதேச செயலகங்களும், கிராம சேவையாளர் பிரிவுகளும் அமைக்கும் தீர்மானம் கொள்கைரீதியாக ஏற்கப்பட்டு, பிரதேச செயலகங்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

03. தோட்டங்களில் ஏழு பேர்ச் சொந்த காணி வழங்கலுக்கான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டது.

04. நீண்ட காலமாக நின்று போயிருந்த, இந்திய அரசின் பெருந்தோட்ட வீடமைப்பு உதவி திட்டம், இலங்கை-இந்திய அரசுகளின் ஒப்புதலுடன், நடைமுறைக்கு வந்தது.

05. தோட்ட தொழிலாளருக்கான சொந்த உறுதி பத்திரம் கொண்ட தனி வீடுகள் கட்டப்படும் திட்டம் மலைநாட்டில் ஆரம்பிக்கப்பட்டது.

06. அவ்விதம், கட்டப்படும் குடியிருப்புகள் மலையகத்தில் புதிய “கிராமங்களாக” அறிவிக்கப்பட்டு, “மலைநாட்டில் தமிழ் கிராமங்கள்” என்ற புதிய காற்று வீச தொடங்கியது.

07. “மலையக மக்களால் வாக்களித்து தெரிவு செய்யப்படும் பிரதேச சபைகளுக்கு, தம்மை தெரிவு செய்யும் தோட்ட புறங்களுக்கு, அபிவிருத்தி நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது” என்ற பிரதேச சபை அதிகார எல்லை சட்டத்தின் 33ம் இலக்க விதி, திருத்தப்பட்டு, பிரதேச சபைகளின் அதிகார வரம்பு, தோட்டபுறங்களுக்கு அதிகாரபூர்வமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

08. மலையக அபிவிருத்திக்கான தனியான அதிகார சபை அமைக்கும் அமைச்சரவை பத்திரம், அமைச்சரவையிலும், பாராளுமன்றத்திலும் சமர்பிக்கப்பட்டு, இன்று சட்டமாகி, பெருந்தோட்ட அபிவிருத்தி அதிகாரசபை அமைக்கப்பட்டுள்ளது.

09. சுமார் 300 தோட்டபுற பாடசாலைகளுக்கு, அவ்வவ் தோட்டங்களில், அவசியப்படும் போது, மேலதிக காணிகளை சுவீகரிக்கும் அதிகாரத்தை கல்வி துறைக்கு வழங்கும் அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவை ஏற்றுக்கொண்டு அங்கீகரித்தது.

10, மலையக மக்களுக்கு, தேசிய அரசியலமைப்பு பணியில், ஏனைய இனங்களுக்கு வழங்கப்படும் அதே சம அந்தஸ்தும், காத்திரமான சமபங்கும், வழங்கப்பட்டன.

11. மலையக மக்கள் தனி ஒரு தேசிய இனம் என்ற அரசியல் கருத்து இன்று தேசிய மற்றும் சர்வதேச சமூகத்தின் மத்தியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது.

12. பெருந்தோட்ட மறுசீரமைப்பு இலக்கில், தோட்ட தொழிலாளர்களின் வருமானத்தை கூட்டும் வெளிப்பயிர்செய்கை வருமான திட்டம் சீரமைக்கப்பட்டு, தோட்ட தொழிலாளர்களை, சிறு நில உடைமையாளர்களாக (மலையக விவசாயி) ஆக்கும் திட்டம் பற்றிய கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, அது, தமுகூ பங்கு கொண்டு ஆதரித்த, 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்கப்பட்டது. இது இப்போது சாதகமான எதிர்கால பயன்பாட்டுக்கான ஆவணம்.

13. மலையக பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பில், ‘மலையக சான்றோர் ஆய்வுக்குழு’ அமைக்கப்பட்டதுடன், அக்குழு கூடி ஆராய்ந்து, பல்கலைக்கழகம் தொடர்பான சாத்தியப்பாட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles