ஜனாதிபதி தேர்தலை அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி ‘லங்காதீப’ வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சர்கள், அரச பங்காளிக்கட்சி தலைவர்கள் மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட தலைவர்களுடன் ஜனாதிபதி கடந்த திங்கட்கிழமை சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாட்டின் ஓர் அங்கமாக இது இருக்கலாம் என தெரியவருகின்றது.
நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகின்றது. எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் அது நேர் பெறுமதிக்கு வந்துவிடும். எனவே, அரசின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கான பின்னணியை கிராமங்களுக்கு சென்று உருவாக்குமாறு ஜனாதிபதி கோரினார் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
