தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி பொறுப்பாளர் சற்குணதேவி இன்று காலை, மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காரணம் கூறாமலேயே பொலிஸார் அவரை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச்சென்றனர் எனவும், அவர் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சற்குணதேவியின் வீட்டிற்கு சென்ற இனந்தெரியாதவர்கள் அவரை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் நேற்று தகவல் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
