இறம்பொடையில் மரம் முறிந்து விழுந்து வீடு சேதம்!

கொத்மலை பிரதேச செயலகத்துக்குட்பட்ட இறம்பொடை, டவுன் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின்மீது இன்று அதிகாலை பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் வீடு பகுதியளவு சேதமடைந்துள்ளது.

நேற்றிரவு கடும் மழை பெய்த நிலையிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதனால் சமையல் அறையும், மற்றுமொரு அறையும் முற்றாக சேதசமடைந்துள்ளன.

இது தொடர்பில் கொத்மலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

Latest Articles