இந்திய, இலங்கை மின்சக்தி வலையமைப்பு 2030 இல் இணைப்பு!

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான மின்சக்தி வலையமைப்பு எதிர்வரும் 2030 ஆம் ஆண்டில் ஒன்றிணைக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்தார்.

பிராந்திய எரிசக்தி ஒருங்கிணைப்பு குறித்து கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக கருத்தாடல் இடம்பெற்றுவருவதாகவும், இத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

இவ்வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தொழில்நுட்ப தேவை உள்ளிட்ட விடயங்களுக்கு உலக வங்கி, இலங்கை மின்சார சபைக்கு ஒத்துழைப்பு வழங்கும் எனவும், இது தொடர்பில் உலக வங்கியின் பிராந்தி ஒருங்கிணைப்பு பணிப்பாளருடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கஞ்சன குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles