நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளமை தவறாகும் – என்று எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
கஜேந்திர குமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிட்ட அவர்,
“தனது பாதுகாப்புக்கென பொலிஸ் அதிகாரிகளையோ அல்லது எம்.எஸ்.டி. (அமைச்சரவை பாதுகாப்பு பிரிவு) அதிகாரிகளையோ வைத்துக்கொள்ளாத அரசியல்வாதிதான் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். சாரதியுடன்தான் அவர் எல்லா இடங்களும் செல்கின்றார். அவர் அமைதியான நபர். இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு ஐந்து, பத்து பேர் இருக்கின்றனர். வடக்கு பகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் அவர் பாதுகாப்பு அதிகாரிகளை வைத்து கொள்ளாதவர். சாரதிமட்டுமே உள்ளார். அவரை கைது செய்தது தவறு. நாடாளுமன்றம்வரும்போது கைது செய்ய முடியாது.” – என்றார்.










