லுணுகலையில் ஆலயங்கள் உடைக்கப்பட்டு அம்மன் தாலி, கண் மலர், உண்டியல்கள் கொள்ளை!

லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு பகுதிகளில் ஆலயங்கள் உடைக்கப்பட்டு உண்டியல், அம்மன் தாலி உள்ளிட்ட பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.

எல்டராடோ தோட்டத்தில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீ கன்னி மாரியம்மன் பத்தினி ஆலயம் உடைக்கப்பட்டு அம்மன் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 3 தாலிகள், தாலிபொட்டுகள், கண் மலர்கள், உண்டியல், DVD player என்பன களவாடப்பட்டுள்ளன என்று லுணுகலை பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் லுணுகலை பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தாலி , தாலி பொட்டு , உண்டியல் என்பன களவாடப்பட்டுள்ளன.

கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். லுணுகலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles