” தான் இன்னமும் ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளராக இருப்பதாக டயானா கமகே எம்.பி. கூறியுள்ளார். இது முற்றிலும் தவறான தகவலாகும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலார் ரஞ்சித் மத்தும பண்டார நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
” ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர் பதவியில் இருந்து டயானா கமகே நீக்கப்பட்டுள்ளார். அதற்கான கடிதம் உள்ளது. நாம் போலி ஆவணத்தை சமர்ப்பிக்கவில்லை. எனவே, இவ்விடயம் தொடர்பில் சிஐடியினர் விசாரணை நடத்தலாம்.
எனவே போலி தகவல்களை வெளியிட வேண்டாம் என டயானா கமகேவிடம் கேட்டுக்கொள்கின்றோம். ஐக்கிய மக்கள் சக்தியின் புண்ணியத்தால்தான் அவர் நாடாளுமன்றம் வந்தார்.” எனவும் மத்தும பண்டார குறிப்பிட்டார்.
