சப்ரகமுவ மாகாணத்துக்கான புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமிக்கப்படவுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுள் ஒருவரான நவீன் திஸாநாயக்க நல்லாட்சியின்போது அமைச்சராக செயற்பட்டார்.
கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் அவர் களமிறங்கியிருந்தாலும் நாடாளுமன்றம் தெரிவாகவில்லை.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது இராஜிநாமாக் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று அனுப்பி வைத்துள்ளார்.
2023 ஜூன் 10 ஆம் திகதி முதல் தனது பதவியை இராஜிநாமா செய்வதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையிலேயே சப்ரகமுவ மாகாணத்துக்கு புதிய ஆளுநராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்படவுள்ளார்.
