“மக்கள் ஆணைக்கு இடங்கொடு, உள்ளாட்சிசபைத் தேர்தலை உடன் நடத்து”

” உள்ளாட்சிசபைத் தேர்தல் இழுத்தடிக்கப்பட்டுவருகின்றது. தேர்தல் பிற்போடப்பட்டு நாளையுடன் மூன்று மாதங்களாகின்றன. எனினும், தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தரப்பில் இருந்து உரிய தலையீடுகள் இல்லை.” – என்று ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

மக்கள் ஆணைக்கு இடங்கொடு, உள்ளாட்சிசபைத் தேர்தலை உடன் நடத்து என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டமொன்று, தேர்தல் ஆணைக்குழுவுக்கு முன்பாக இன்று மாலை நடைபெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் அரசியல் குழு உறுப்பினர்கள், முன்னாள் எம்.பிக்கள், கட்சி செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், மக்கள் என பெருமளவானோர் இதில் பங்கேற்றிருந்தனர். போராட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

Related Articles

Latest Articles