‘இம்மாதத்துக்குள் தொழிற்சாலை திறக்கப்படவேண்டும்’ – 6ஆவது நாளாகவும் போராட்டம்

கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட ஹெல்பொட, காச்சாமலை தோட்டத்தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (21) ஆறாவது நாளாகவும் தொடர்ந்தது.

பல தசாப்தங்களாக இயங்கிய தொழிற்சாலையை மூடுவதற்கு நிர்வாகம் எடுத்த முடிவைக்கண்டித்தும், தொழிற்சாலையை மீள திறக்குமாறு வலியுறுத்தியுமே தொழிலாளர்கள் போராடிவருகின்றனர்.

இந்நிலையில் இவ்விகாரம் தொடர்பில் தோட்ட நிர்வாகத்துக்கும், இ.தொ.காவின் உப செயலாளர் பாரத் அருள்சாமிக்குமிடையில் இன்று (21) கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இதன்போது தொழிற்சாலையை மீளத்திறப்பதற்கு நிர்வாகம் அனுமதி கோரியுள்ளது. தேயிலை விலை அதிகரிக்கும்பட்சத்தில் இடையில் திறப்பதாகவும் உறுதியளித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பாரத் அருள்சாமி,

” தொழிற்சங்கம் என்ற ரீதியில் பேச்சுவார்த்தையை சுமுகமாக நிறைவு செய்துள்ளோம்.  தொழிற்சாலை மூடப்பட்டிருந்தாலும் வருடாந்தம் போனஸ் வழங்கப்பட வேண்டும், தொழிற்சாலையில் வேலைசெய்த ஊழியர்களுக்கு அதே சம்பளத்துடன் வேலைவாய்ப்பு, வாகன வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். வாராந்தம் நிர்வாகத்திடம் அறிக்கையும் கோரப்பட்டுள்ளது. வழங்கிய கால எல்லைக்குள் தொழிற்சாலை மீள திறக்கப்படவேண்டும் எனவும் கோரினோம். இதற்கு நிர்வாகம் உடப்ட்டது” என்றார்.

எனினும், இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தொழிலாளர்கள்,

” ஏற்கனவே ஒன்றரை மாதம் அவகாசம் கேட்டு தொழிற்சாலையை திறக்காத தோட்டக்கம்பனி, ஆறுமாத காலத்துக்குள் திறக்கும் என நம்ப முடியாது. இம்மாத இறுதிக்குள் திறந்தே ஆகவேண்டும். அதுவரை எமது சத்தியாக்கிக்கிரக போராட்டம் தொடரும்.” – என்றார்.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles