6 மாதத்துக்குள் பொதுத்தேர்தல்! நாமலை எதிர்க்கட்சி தலைவராக்க வியூகம்!!

நாட்டில் அடுத்த ஆறு மாத காலத்துக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியமே உள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

” நாட்டில் ஜனாதிபதி தேர்தலொன்று முதலில் நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை. அடுத்த ஆறு மாதங்களில் பொதுத்தேர்தலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பது ராஜபக்ச குடும்பத்துக்கு தெரியும். எனவே, நாடாளுமன்ற தேர்தல் ஊடாகவேனும் நாமல் ராஜபக்சவை எதிர்க்கட்சி தலைவராக்குவதற்கு குடும்பத்தினர் முற்படுகின்றனர்.

இதற்கான ஆரம்பக்கட்ட நகர்வாகவே ஜனாதிபதியுடனான சந்திப்பை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.” எனவும் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

 

 

 

 

Related Articles

Latest Articles