ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பல கட்சிகளின் ஆதரவு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன இன்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் ஸ்தீரத்தன்மை ஏற்பட வேண்டுமானால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறைந்த பட்சம் இன்னும் ஐந்து அல்லது பத்தாண்டுகளுக்காவது ஜனாதிபதி பதவியில் நீடிக்க வேண்டும். அப்போதுதான் வேலைத்திட்டத்தை முறையாக முன்னெடுக்க முடியும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அந்த கட்சிகள் கூட்டணியாகவே அடுத்த தேர்தலை எதிர்கொள்ளும். அந்த கூட்டணிக்கு ஐக்கிய தேசியக் கட்சியே தலைமை வகிக்கும். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் நாடாளுமன்ற ஆட்சி இருந்தால் ஜனாதிபதியால் தமது பணிகளை சிறப்பாக முன்னெடுக்க முடியும்.” எனவும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டார்.










