அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்று டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” அடுத்த ஜனாதிபதி தேர்தலை எதிரணிகள் கூட்டாக எதிர்கொள்ளாவிட்டால் வெற்றியை நோக்கி நகர முடியாத நிலை ஏற்படும். எனவே, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவென்றால் அனைவரும் அவரை ஆதரிக்க வேண்டும். சஜித் இல்லாமல் அநுரகுமார திஸாநாயக்க வேட்பாளர் எனில் அவரை ஆதரிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் பிரிந்து நின்று போட்டியிட்டால் பிரதான இலக்கை அடைய முடியாமல் போகும்.
அத்துடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மற்றும் ஜனாதிபதிக்கிடையிலான அரசியல் உறவு விரைவில் முடிவுக்கு வரும்.” எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.










