இணைய குற்றங்கள் தொடர்பாக 75 பேர் கைது!

இலங்கையில் இணைய  குற்றங்கள் தொடர்பாக இந்த வருடத்தில் இதுவரை 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சிறிலங்கா காவல்துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கையொன்றை வெளியிட்டு, கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக, இணைய  குற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை பலமுறை எச்சரிக்கை விடுத்து வருகிறது.

Related Articles

Latest Articles