” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையிலான அரசியல் உறவில் எவ்வித விரிசலும் ஏற்படவில்லை. இணைந்தே பயணிக்கின்றோம். இனியும் அப்படியே பயணிப்போம்.”
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதாக இருந்தால், அதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்க வேண்டியது கட்சியின் பொறுப்பாகும். எனவே, அது குறித்து கட்சிக்கு அறிவிக்குமாறு நாம் ஜனாதிபதியிடம் கோரினோம். ஜனநாயகத்தை நேசிக்கும் தலைவர் என்ற வகையில் அந்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றார்.” எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.
