நாமலின் பயணத்தடை நீக்கம்

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக க்ரிஷ் லங்கா பிரைவேட் லிமிட்டட் தாக்கல் செய்திருந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், நாமலுக்கு வெளிநாட்டு பயணத்தடையும் நீக்கப்பட்டுள்ளது.

இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையிலேயே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

க்ரிஷ் லங்கா பிரைவேட் லிமிட்டட், இலங்கை ரக்பி சம்மேளனத்துக்கு வழங்கிய 7 கோடி ரூபாவினை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பெற்றுக்கொண்டுள்ளதாகவும், அதில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் அவருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles