தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களுக்கு அரசு அழைப்பு!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களும் அரசுடன் இணைந்தால் மகிழ்ச்சி. மனோ கணேசன், திகாம்பரம் ஆகியோரை வரவேற்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் – என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” எதிர்க்கட்சி தலைவரிடம் தூரநோக்கு தூரநோக்கு சிந்தனை கிடையாது. அவரால் உபதேசம் மட்டுமே வழங்கிக்கொண்டிருக்க முடியும். எதிரணியில் உள்ளவர்கள் அரசுடன் இணைவார்கள். அதற்கான சுபநேரம் வரும்வரை காத்திருக்கின்றனர். சஜித் தலைமையின்கீழ் எதிர்காலம் இல்லை என்பது அவர்களுக்கு தெரியும்.

மனோ கணேசன், திகாம்பரம் போன்றவர்கள் அரசுடன் இணைவதற்கு நாம் எதிர்ப்பு இல்லை. அவர்கள் வரவேண்டும். ” எனவும் அமைச்சர் கஞ்சன குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles