பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு இரண்டாவது தடவையும் சேவை நீடிப்பு வழங்கப்படவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவரது சேவைக்காலம் நாளையுடன் (26) முடிவடைகிறது.
புதிய பொலிஸ் மா அதிபர் தொடர்பில் அரசியலமைப்பு சபைக்கு இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை.
அத்துடன் அரசியலமைப்பு சபை நாளை கூடவதற்கான தீர்மானம் எடுக்கப்படாத நிலையில் புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் விரைவாக மேற்கொள்ளப்பட மாட்டாது.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன கடந்த மார்ச் 26 அன்று ஓய்வு பெறவிருந்தார், எனினும், அவருக்கு மூன்று மாத சேவை நீடிப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










