‘பொகவந்தலாவை சம்பவம்’ – அமைச்சர் ஜீவனுக்கு எதிராக சஜித் அணி பொலிஸில் முறைப்பாடு!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின்  ஹங்குராங்கெத்த தொகுதி அமைப்பாளரான ஹிரண்யா ஹேரத்தே இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமான் பொகவந்தலாவ நகரில் வைத்து பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்தி, அவர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளார் என சுட்டிக்காட்டி, இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

அதேவேளை, பொகவந்தலாவை நகரில் இளைஞர் ஒருவரை கைது செய்யும்போது பொலிஸார் செயற்பட்ட விதம் தொடர்பில் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் ஹிரண்யா ஹேரத் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டாளர் – ஹிரண்யா ஹேரத்

Related Articles

Latest Articles