” ஏற்கனவே 50% வீதத்திற்கும் அதிகமான வரி ஊடாக திறைசேரிக்கும், பொருளாதாரத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வங்கிக் கட்டமைப்பின் மீது தொடர்ந்தும் சுமையை அதிகரிக்கப் போவதில்லை.” – என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார் .
5 மில்லியன் வைப்பாளர்களைப் பாதுகாப்பதை உறுதி செய்வதாகவும் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற விசேட செய்திளார் சந்திப்பில் அவர் கூறினார்.