சப்ரகமுவ மாகாண பெருந்தோட்ட தொழிலாளர்கள் குறித்து ஆளுநருடன் பேச்சு

இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது குறித்து சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்கவுடன் ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் சுப்பையா ஆனந்தகுமார் இன்று கலந்துரையாடியுள்ளார்.

சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டமைக்கு ஆளுநர் அலுவலகத்துக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த சுப்பையா ஆனந்தகுமார் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

இந்த மாவட்டங்களில் பாடசாலைகளில் காணப்படும்; பல்வேறு குறைப்பாடுகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பாடசாலைகள் எதிர்கொண்டுள்ள சிக்கல்கள் மற்றும் தமிழ் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை குறித்தும் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

அதேபோன்று பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு தோட்டங்களில் பயன்படுத்தப்படாதுள்ள நிலங்கள், தரிசு நிலங்களை விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பெற்றுக்கொடுப்பது குறித்தும்  கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் சமூகநலத்திட்டங்கள் மற்றும் நிவாரணத் திட்டங்களில் இந்த மாவட்டங்களின் மக்களையும் இணைத்துக்கொள்வதுடன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பெருந்தோட்ட மக்களுக்கு முன்னுரிமையளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

அதேபோன்று வாழ்வாதாரத்தை இழந்தது தவிக்கும் பெருந்தோட்ட மக்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தல், உழைப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக்கொடுப்பது குறித்தும் பெருந்தோட்டங்களில் காணப்படும் சுகாதார குறைப்பாடுகளுக்கு உரிய தீர்வை வழங்குவதன் அவசியத்தையும் ஆளுநரிடம் எடுத்துரைத்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles