‘அரவிந்தகுமார் இரட்டை நாக்குடைய மிகப்பெரிய நயவஞ்சகர்’ – சிவலிங்கம் சாட்டையடி

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமாரைப் போல நயவஞ்சகரை இதுவரை பார்த்தது கிடையாது என்றும் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பது எவ்வாறு என்பதை அரவிந்தகுமாரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆறுமுகம் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரவிந்த குமார், இரட்டை நாக்குடைய மிகப்பெரிய நயவஞ்சகர். அவர் சுயநலத்துக்காக எதையும் செய்யக் கூடியவர் என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய மீதும் பிரதமர் மகிந்த ராஜபக்ச மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்திருந்தார். தமிழ் மக்களின் இன உணர்வுகளைத் தூண்டி, சாகும் வரை தமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு வாக்களிக்கக் கூடாது என பிரசாரங்களை மேற்கொண்டார்.

ஆனால் அவ்வாறு மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு இன்று சுயநலனுக்காக அடமானம் வைத்திருக்கிறார். அது மாத்திரமல்லாது அவ்வாறு வாக்குகளை அடமானம் வைத்து தனக்குத் தேவையான சலுகைகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்டு அவர்களுக்குத் தெரியாமல் ஆளும் கட்சியுடன் கள்ள உறவை வைத்திருந்த கேவலமான மனிதர் அவர். நேர்மையான ஒரு நபராக இருந்திருந்தால் கட்சியுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தி, உரிய முறையில் மக்களுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டு அராங்கத்துக்கு வாக்களித்திருப்பார்.

ஆயினும் அற்ப சலுகைகளுக்காக மக்களின் கொள்கைகளை விட சுயலாபமே அவருக்கு முக்கியம் என்பதை இன்று எங்களால் அறிய முடிகின்றது.

செந்தில் தொண்டமான் அவர்கள் அரச தரப்பில் வாக்குக் கேட்கும்போது அவருக்கு வாக்களித்திருந்தால் இன்று பதுளை மாவட்டத்தில் சக்தி வாய்ந்த கெபினட் அமைச்சு மட்டுமன்றி பதுளை மாவட்ட மக்கள் இந்த அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்திருப்பார்கள்.

ஆனால் இன்று அரவிந்தகுமாருக்கு வாக்களித்ததால் பின் கதவு வழியாக அரசாங்கத்துக்கு உள்ளே நுழைய வேண்டிய சூழ்நிலை அவ்வாறு உருவாகியிருக்கிறது.

மரியாதையோடு செல்ல இருந்த தமிழ் மக்களை தன்னோடு சுய இலாபத்துக்காக இனவாதத்தைப் பேசி திசை திருப்பி மீண்டும் அவர்களை கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடம் அடகு வைத்த பெருமை அரவிந்த குமாரையே சாரும்.

இப்படியான நயவஞ்சகரை நான் இதுவரை பார்த்தது கிடையாது. மக்கள் உண்மை நிலை என்ன என்பதை புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles