பேலியகொடையிலிருந்து மஸ்கெலியா, பிரவுன்லோ பகுதிக்கு வருகைதந்த நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட கங்கேவத்த பிரிவில் உள்ள 41 வயதுடைய நபர் ஒருவர் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிகின்றார். இவர் கடந்த 17 ஆம் திகதி மஸ்கெலியா கங்கேவத்த பிரிவில் உள்ள அவரது இல்லத்துக்கு வருகை தந்துள்ளார்.
அவ்வாறு வரும்வழியில் மஸ்கெலியா நகரில் பல இடங்களுக்கு சென்றுள்ள அவர், மீண்டும் 19 ஆம் திகதி போலியகொடை சென்றுள்ளார்.
இந்நிலையில் அவரிடம் நேற்று 23 பீசீஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன்போது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளார்.
அவரது குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கும் மஸ்கெலியா சுகாதார அதிகாரிகளினால் நாளை தினம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்