‘ஒருவாரத்தில் சாதகமான பதில்’ – ஜீவன் தொண்டமான் உறுதி!

” எல்பொட காச்சாமலை தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பில் இன்னும் ஒரு வாரத்தில் சாதகமான பதில் பெற்றுக்கொடுக்கப்படும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உறுதியளித்துள்ளார்.

தம்ரோ பெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் இயங்கும் எல்பொட தோட்டத்தில், மூடப்பட்ட தொழிற்சாலையை மீள திறக்குமாறு வலியுறுத்தி தொழிலாளர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவந்தயடுத்து, குறித்த தோட்டத்தை சேர்ந்த மாவட்ட தலைவர், தோட்ட தலைவர்கள் , தலைவிகள் ஆகியோரை அழைத்து நேரில் கலந்துரையாடினார்.

இதன்போது இன்னும் ஒரு வாரத்தில் தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடி தீர்க்கமான தீர்வு எட்டப்படும் என்ற உறுதிமொழியை ஜீவன் தொண்டமான் வழங்கியுள்ளார்.

இக் கூட்டத்தில் இ,தொ,காவின் உப தலைவர்களில் ஒருவரான சட்டத்தரணி மாரிமுத்து மற்றும் இ.தொ.காவின் மாநில காரியாலயத்தின் உத்தியோஸ்தர்கள் குறித்த தோட்ட தலைவர்,தலைவிகள் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles