மூன்றரை வயது ஆண் குழந்தை மீது சுடுநீர் ஊற்றிய தந்தை – பெயார் வெல் தோட்டத்தில் கொடூரம்

மதுபோதையில் வீட்டுக்கு வந்த தந்தையொருவர், தனது மூன்றரை வயது ஆண் குழந்தைமீது கொதி நீரை ஊற்றி தாக்குதல் நடத்தியுள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெயார் வெல் தோட்டத்திலேயே நேற்று இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த குழந்தையின் தாய் கொழும்பில் வேலை செய்துவருகின்றார். பாட்டியின் பராமரிப்பின்கீழ்தான் 6 பிள்ளைகள் வளர்ந்துவருகின்றனர். ஆறாவது குழந்தைமீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர். குழந்தையை தாக்கிய தந்தையை கைது செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவருகின்றது.

செ.தி. பெருமாள், கௌசல்யா

Related Articles

Latest Articles