இறைச்சிக்காக மாடுகளை கொண்டுவந்த இருவர் கம்பளையில் கைது!

கம்பளை, குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேரிவல தோட்டத்திலிருந்து அனுமதி பத்திரமின்றி, இறைச்சிக்காக மூன்று மாடுகளை சிரியரக லொறியொன்றில் ஏற்றிவந்த இருவர் இன்று (25) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரவுநேர வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குறுந்துவத்த பொலிஸாராலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், லொறியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அனுமதி பத்திரமின்றி இறைச்சிக்காக மாடுகளை கொண்டுசென்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள, கம்பளை, கஹட்டபிட்டிய பகுதியைச் சேர்ந்த இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கம்பளை நிருபர்

Related Articles

Latest Articles