கூட்டமைப்பு எம்.பிக்களுடன் இந்திய தூதுவர் அவசர சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பயணத்தை முடித்து நாடு திரும்பியுள்ள நிலையில், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேரையும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே நாளைமறுதினம் முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணத்தின் போதான உறுதிமொழிகள், 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நடத்திய சர்வகட்சிக் கூட்டம் என்பன தொடர்பில் ஆராயப்படும் என்று தெரிகின்றது.

Related Articles

Latest Articles