தெஹிவளை, பொதுச்சந்தை வளாகத்துக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள விஜய குமாரதுங்கவின் உருவச்சிலைமீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் விஜய குமாரதுங்கவின் உருவச்சிலையில் முகப்பகுதி ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.
இந்த சேதத்தை ஏற்படுத்தியவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.