உக்ரைன்மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குறைந்தபட்சம் 8 பேர் பலியாகியுள்ளனர். 31 பேர் காயமடைந்துள்ளனர்.
கிழக்கு உக்ரைன் நகரமான போக்ரோவ்ஸ்க் மீது ரஷ்யாவின் இரு ஏவுகணைகள் தாக்கியதில் குடியிருப்பு கட்டடம் சேதமடைந்தது. இந்த தாக்குதலில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதேபோல் நடந்த இரண்டாவது தாக்குதலில் டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் உயர்மட்ட அவசர அதிகாரி கொல்லப்பட்டார். மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 19 பொலிஸ் அதிகாரிகள், ஐந்து மீட்புப் பணியாளர்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்குவர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.










