மலையக மக்களுக்கான அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் முழு ஆதரவு!

” மலையக மக்கள் சார்பான அனைத்து வேலைத்திட்டங்களையும் நாங்கள் ஆதரிப்போம்.” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

” 1948 ஆம் ஆண்டில் வாக்குரிமை சட்டம் கொண்டு வரப்பட்ட போது, மலையக தமிழர்களுக்கு வாக்குரிமையை கொடுப்பதற்கு இரண்டு தலைமுறைகள் போக வேண்டியதை போன்றிருந்தது. நடைமுறை ரீதியில் அவர்கள் பிரஜாவுரிமையை இழந்தவர்களாக இருந்தனர். இந்திய பாகிஸ்தான் சட்டத்தால் அந்த காலத்தில் 85 வீதமான மலையக தமிழர்கள் பிரஜாவுரிமையை இழந்தனர்.
இவர்கள் அரசற்றவர்களாக இருந்தனர்.

ஶ்ரீமா – சாத்திரி சட்டத்தின் கீழ் இவர்களில் பலர் இந்தியா சென்றனர். இலங்கையில் தான் அவர்கள் பிறந்தவர்களாக இருந்தனர். அவர்களை வெளியே அனுப்பியது தவறு. எவ்வாறாயினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக நாங்கள் அனைத்து நகர்வுகளிலும் மலையக மக்களுக்கான அனைத்து பணிகளிலும் ஆதரவளித்துள்ளோம். எந்த பக்கத்தில் இருந்தாலும் தொடர்ந்தும் நாங்கள் இந்த மக்களுக்காகவும் செயற்படுவோம் என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles