சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தமே மலையக மக்களை பலம் இழந்தனர் – ரவூப் ஹக்கீம்

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தாமல் இருந்திருந்தால் மலையக மக்கள் இன்று பலமானவர்களாக இருந்திருப்பார்கள் – என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சூரியன் வானொலியில் நேற்று ஒலிபரப்பான ‘விழுதுகள்’ அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” மலையக மக்களுக்கு என்றாவது ஒரு நாள் பிரஜை உரிமை கிடைக்கப்பெற்றிருக்கும். பிரேமதாச – தொண்டமான் காலத்தில் அது சாத்தியமானது முக்கிய மைல்கல்லாகும். இதனால் அரசியல், தொழிற்சங்க பலத்தை மக்கள் பெற்றார்கள். பல விடயங்களை வென்றெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சிறிமா – சாஸ்திரி ஒப்பநதத்தின் பிரகாரம் பலர் இந்தியாவுக்கு அனுப்பட்டதால் மலையக மக்கள் சனத்தொகை வீழ்ச்சியடைந்தது. அவ்வாறு நடைபெறாமல் இருந்திருந்தால் மலையக சமூகம் இன்று இரட்டிப்பாக இருந்திருக்கும். சிறுபான்மை சமூகத்துக்கு அது மேலும் பலமாக இருந்திருக்கும்.” – எனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles