எரிபொருள் ஏற்றிச்சென்ற பௌசரும், காரொன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த ஐவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் மேலதிக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
கார் சாரதி மது அருந்தியிருந்தார் என இவ்விபத்து தொடர்பில் எமது செய்தியாளர் முதலில் அனுப்பியிருந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கார் சாரதி மது அருந்தியிருக்கவில்லை எனவும், காரில் பயணித்த ஏனையோர் மது அருந்தியிருந்தனர் எனவும் திம்புள்ள – பத்தனை பொலிஸார் எமது செய்தியாளரிடம் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கள் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் திம்புள்ள – பத்தனை சந்தியில் வைத்தே நேற்றிரவு (12.08.2023) 10 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த ஐவரும் நோர்வூட் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
பத்தனை நிருபர்
