இலங்கையில் மின்சார கார் அறிமுகம்

இலங்கையில் அமைந்துள்ள கார் உற்பத்தி நிறுவனமான மைக்ரோ கார் லிமிடெட் புதியவகை மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒருமுறை மின்கலத்தை மின்னேற்றினால் 500 கிலோமீட்டர்கள் பயணிக்கக்கூடிய மின்சார காரை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது இலங்கையில் MG5 EV 2023 எனும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

08 வருட உத்தரவாதத்துடன் காரினை உற்பத்தியாளரிடமிருந்து நேரடியாகவே உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்த மைக்ரோ கார் லிமிடெட் தீர்மானித்துள்ளது.

இந்த செய்திகள் தொடர்பாக இலங்கை முதலீட்டு வாரியம் தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளது.

Related Articles

Latest Articles