மலையக மக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் -திகா எச்சரிக்கை

மலையக மக்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

மாத்தளை எல்கடுவ ரத்துவத்தை தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மலையக மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு .அவர்கள் அமைதி காக்கின்றார்கள் என்பதற்காக கையாளாதவர்களாக தோட்ட நிர்வாகங்கள் கருதி விடக்கூடாது . அவர்கள் திருப்பி அடிக்க ஆரம்பித்தால் தோட்ட நிர்வாகங்கள் தோட்டத்தை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கடுமையான கண்டனத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

எல்கடுவ பெருந்தோட்ட கம்பெனியின் தலைவரிடம் சம்பவத்தோடு தொடர்புடைய தோட்ட அதிகாரிக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதோடு அங்கு வாழ்கின்ற மக்களுக்கான அவர்கள் கோரும் காணியினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளேன் .எனவே அதற்கான நடவடிக்கைகள் இதயசுத்தியோடு இடம்பெறும் என நம்புகின்றேன்.

இனி ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தோட்ட நிர்வாகங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பாரிய விபரீத விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும்.”   என்றுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles