மீண்டும் அரசியலுக்குள் வரமாட்டேன் – சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்தார் கோட்டா!

தான் மீண்டும் அரசியலுக்கு வரவுள்ளதாக வெளியாகும் தகவல்களை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்குள் வரவுள்ளதா எனவும், அதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன எனவும் வெளியாகியுள்ள தகவல்கள் தெற்கு அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோட்டாபய ராஜபக்சவை நேரில் சந்தித்து ,இது பற்றி வினவியுள்ளனர். இதற்கு பதிலளித்த கோட்டா,

” அரசியலுக்கு ஒரு தடவை வந்தேன், ஒதுங்கினேன். அதிகாரத்தை தக்கவைக்க வேண்டும் என்பது அல்ல என் நோக்கம். மீண்டும் அரசியலுக்கு வரும் அளவுக்கு வாழ்க்கையில் பக்குவம் இல்லாத நபர் நான் அல்லன்.” என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles